Sunday, August 9, 2015

டாலியா (DALIYA)


தேவையானவை: டாலியா  (சம்பா கோதுமை) - அரை கப், தண்ணீர் - ஒன்றேகால் கப், நறுக்கிய பெரிய வெங்காயம் -1, நறுக்கிய ் பச்சை மிளகாய்- 1, இஞ்சிப்பூண்டு பேஸ்ட் -அரை டீஸ்பூன், நறுக்கிய கேரட் -1, நறுக்கப்பட்ட பீன்ஸ் -6, மிளகாய் பவுடர் -அரை டீஸ்பூன் (தேவைப்பட்டால் மட்டும் சேர்த்துக்கொள்ளவும்), மல்லிப் பொடி - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், சீரகப்பொடி -அரை டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன்
செய்முறை: சம்பா கோதுமையை  கால் கப் வெந்நீர் விட்டு, 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, சீரகப்பொடி, கடுகு, வெங்காயம், தக்காளி சேர்த்து, நன்றாக வதக்கவும். பின்னர், பச்சை மிளகாய், இஞ்சிப்பூண்டு பேஸ்ட் சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அதன் பின்னர் கேரட், பீன்ஸ், மிளகாய்ப் பொடி, மல்லிப்பொடி, உப்பு, ஊறவைத்த சம்பா கோதுமை சேர்த்து, குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும். சூடாகச் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.
பலன்கள்: கார்போஹைட்ரேட் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவு இது. காலை உணவாகச் சாப்பிடுவது நல்லது. சர்க்கரை நோயாளிகள், உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற உணவு.

No comments:

Post a Comment