Monday, August 3, 2015

மீல்மேக்கர் கீர்

தேவையானவை:  மீல்மேக்கர் உருண்டைகள் - 30, பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஒன்றரை கப், ரோஸ் வாட்டர் - ஒரு டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை - சிறிதளவு.
செய்முறை: கொதிக்கும் நீரில் மீல்மேக்கர் உருண்டைகளைப் போட்டு 5 நிமிடம் மூடி வைக்கவும். பின்னர் எடுத்து, குளிர்ந்த நீரில் கழுவி, பிழிந்து கொள்ளவும். பிழிந்த உருண்டைகளை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி துருவலாக எடுத்துக்கொள்ளவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, முந்திரி, திராட்சையை வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் மீல்மேக்கர் துருவலை நன்கு வதக்கிக் கொள்ளவும். காய்ச்சிய பாலில் மீல்மேக்கர் துருவலை சேர்த்து, குறைந்த தீயில் வேகவிடவும். 20 நிமிடம் கழித்து, சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும். பால் சுண்டி வரும்போது, முந்திரி, திராட்சை, ரோஸ் வாட்டர் சேர்த்து இறக்கிப் பரிமாறவும். இதை குளிர வைத்தும் பரிமாறலாம்.

No comments:

Post a Comment