Monday, August 3, 2015

ஸ்வீட் கார்ன் தேங்காய் உருண்டை

தேவையானவை: கொர கொரப்பாக அரைத்த ஸ்வீட் கார்ன் விழுது - ஒரு கப், வேக வைத்த பச்சைப் பட்டாணி - கைப்பிடி அளவு, சீரகம் - அரை டீஸ்பூன், மிளகுத்தூள், உப்பு - சிறிதளவு, இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், துருவிய தேங்காய் - கால் கப், எண்ணெய் - 200 கிராம், சோள மாவு கரைசல் - சிறிதளவு (சோள மாவை சிறிது உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பஜ்ஜி மாவு போல் கரைக்கவும்).
செய்முறை:  ஸ்வீட் கார்ன் விழுது, வேக வைத்த பச்சைப் பட்டாணி, சீரகம், மிளகுத்தூள், உப்பு, இஞ்சி - பூண்டு விழுது, துருவிய தேங்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்துக் கலந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.  இந்த உருண்டையை சோள மாவு கரைசலில் தோய்த்து, சூடான எண்ணெயில் சிவக்க பொரித்தெடுக்கவும்.

No comments:

Post a Comment