Tuesday, February 16, 2016

டிப்ஸ்... டிப்ஸ்...

ல்லாரைக் கீரையை சுத்தம் செய்து, பத்து இலைகளை எடுத்து, ஐந்து மிளகு சேர்த்து அரைத்து மோரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் மூன்று மாதம் குடித்து வந்தால்... தளர்வுற்ற தேகம் பலம் பெறும்; மூளை திசுக்கள் வலுப்பெறும்; நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

வையை உப்பு போட்டு பிசறி வைத்து, அதனுடன் அரைத்த உளுந்து மாவை சேர்த்து தோசை வார்த்தால், சுவையோ சுவை!

வாழைப்பூவை அரைத்து சாறெடுத்து, அச்சாற்றின் அளவு பனங்கற்கண்டு சேர்த்து பருகி வந்தால்... மாதவிடாய் ரத்தப்போக்கு அதிகமாதல், வெள்ளைப்படுதல் சரியாகும்.

ஜாங்கிரி செய்யும்போது நீரில் ஊறவைத்த உளுத்தம்பருப்பை விழுதாக அரைத்து, அத்துடன் ஒரு கப் உளுந்து விழுதுக்கு ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி மாவைக் கலக்கவும். அப்படிச் செய்தால் எண்ணெய் அல்லது நெய்யில் ஜாங்கிரி பிழியும்போது, உடைந்து போகாமல் முழுசாக வரும். சுவையும் ‘ஏ-ஒன்’தான்!

காய்கறிகளை பாலித்தீன் கவரில் போட்டு ஃப்ரிட்ஜில் வைக்கப் போகிறீர்களா? கவர்களில் கோணி ஊசியால் குத்தி துளைகள் போட்ட பின், காய்களை அதில் வைத்தால், காய்கள் பல நாட்கள் அழுகாமல் இருக்கும்.

ழைய சாதம் மிகுந்துவிட்டால் அதனுடன் உப்பு சேர்த்து அரைத்து, ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து, ஆப்பமாக செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.


பால் சேர்க்காத தேநீரில் கொஞ்சம் தேன் விட்டு சாப்பிட்டால்... தொண்டை கட்டு விலகும்; தொண்டை கரகரப்பு நீங்கும்.

மோர்க்குழம்பு கொதித்து இறக்கும்போது, சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கினால், நல்ல வாசனையாக இருக்கும்.

கக்கண்ணில் வீக்கமும் வலியும் இருந்தால், ஒரு கரண்டியில் நல்லெண்ணெய் ஊற்றி சுடவைத்து, ஒரு துணியில் உப்பை மூட்டையாக கட்டி, எண்ணெயில் தோய்த்து, லேசான சூட்டில் நகக்கண்ணில் ஒற்றினால், விரைவில் சரியாகும்.