Sunday, July 5, 2015

ஓட்ஸ் சேமியா இட்லி



தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் - 1 கப்
சேமியா - 1 கப்
தயிர் அரை - கப்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
ப.பட்டாணி - சிறிதளவு பொடியாக நறுக்கியது
கேரட் - 1 (துருவியது)

தாளிக்க :

கடுகு கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை :

• சேமியாவை வறுத்து பொடித்து கொள்ளவும்.

• கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு கறிவேப்பிலை போட்டு தாளித்து கேரட், பட்டாணியை போட்டு சிறிது வதக்கவும்.

• பின்னர் அதில் வறுத்த சேமியா, ஓட்ஸ் போட்டு சிறிது கிளறி இறக்கி ஆற விடவும்.

• ஆறியதும் அதில் தயிர், சமையல் சோடா, உப்பு சேர்த்து நன்றாக இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்.

• இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து இந்த கலவையை இட்லிகளாக ஊற்றி 8 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.

• சத்தான சுவையான ஓட்ஸ் சேமியா இட்லி ரெடி

கொண்டைகடலை - முருங்கை கீரை அடை



தேவையான பொருட்கள் : 

துவரம் பருப்பு - 1 கப் 
உளுத்தம் பருப்பு - 1 கப் 
கடலைப்பருப்பு - 1 கப் 
கொண்டைகடலை - 1 கப் 
பாசிபருப்பு - 1 கப் 
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன் 
முருங்கை கீரை - 1 கப் 
கொத்தமல்லி - சிறிதளவு 
கறிவேப்பிலை - சிறிதளவு 
வெங்காயம் - 2 
மிளகாய் தூள் - 1 ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - சிறிதளவு 
சீரகத்தூள் - அரை ஸ்பூன் 

செய்முறை : 

• மேலே சொன்ன பருப்பு வகைகளை 4 மணி நேரம் ஊற வைத்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும். 

• பெருஞ்சீரகத்தை ஒன்றும் பாதியாக பொடித்து கொள்ளவும். 

• முருங்கை கீரை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

• ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அதில் நறுக்கிய முருங்கைகீரை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், பெருஞ்சீரம், மிளகாய் தூள், உப்பு, சீரகப்பொடியை போட்டு நன்றாக மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். 

• தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் இந்த மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும். 

• சுவையான சத்தான கொண்டைகடலை - முருங்கை கீரை அடை ரெடி.

கோடைக்கு இதம் தரும் வெள்ளரி மோர் பானம்

தேவையான பொருட்கள்: 

மோர் - 1 கப் 
வெள்ளரிக்காய் - 1 
உப்பு - தேவையான அளவு 
ஐஸ் கியூப்ஸ் - 5 
மிளகு தூள் - சிறிதளவு 
கொத்தமல்லி தழை - சிறிதளவு 
இஞ்சி - சிறிதளவு
செய்முறை : 


• கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

• வெள்ளரிக்காயின் தோலை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்னர் நறுக்கிய வெள்ளரிக்காய், இஞ்சிய மிக்சியில் போட்டு சிறது தண்ணீர் சேர்த்து சாறு எடுத்துக் கொள்ளவும். 

• ஒரு கண்ணாடி டம்ளரில் முதலில் வெள்ளரி சாறை ஊற்றவும். பின் மோர் ஊற்றி அதன் மேல் உப்பு, மிளகு தூள், கொத்தமல்லி தழை தூவி நன்றாக கலந்து பருகவும். 

• மோர், வெள்ளரி இரண்டும் கோடை வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சி தருபவை. கோடைக்காலத்தில் இவ்வாறு அடிக்கடி செய்து சாப்பிடும் போது உடலில் உள்ள நீர்சத்து குறையால் தடுக்கலாம். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அவ்வாறு செய்து குடிக்கலாம்.