Sunday, July 5, 2015
கொண்டைகடலை - முருங்கை கீரை அடை
தேவையான பொருட்கள் :
துவரம் பருப்பு - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1 கப்
கடலைப்பருப்பு - 1 கப்
கொண்டைகடலை - 1 கப்
பாசிபருப்பு - 1 கப்
பெருஞ்சீரகம் - 1 ஸ்பூன்
முருங்கை கீரை - 1 கப்
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
வெங்காயம் - 2
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - சிறிதளவு
சீரகத்தூள் - அரை ஸ்பூன்
செய்முறை :
• மேலே சொன்ன பருப்பு வகைகளை 4 மணி நேரம் ஊற வைத்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
• பெருஞ்சீரகத்தை ஒன்றும் பாதியாக பொடித்து கொள்ளவும்.
• முருங்கை கீரை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் அரைத்த மாவை போட்டு அதில் நறுக்கிய முருங்கைகீரை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம், பெருஞ்சீரம், மிளகாய் தூள், உப்பு, சீரகப்பொடியை போட்டு நன்றாக மாவு பதத்தில் கலந்து கொள்ளவும்.
• தோசை கல்லை அடுப்பில் வைத்து அதில் இந்த மாவை ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.
• சுவையான சத்தான கொண்டைகடலை - முருங்கை கீரை அடை ரெடி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment