Monday, August 3, 2015

டிரைஃப்ரூட்ஸ் சேமியா பாயசம்

தேவையானவை:  சேமியா - 100 கிராம் (மிகவும் மெல்லியதான சேமியா என்று கேட்டு வாங்கவும்), பால் -  ஒன்றரை லிட்டர், பாதாம், முந்திரி - தேவைக்கேற்ப, பேரீச்சம்பழம் - 10, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 2 கப்.
செய்முறை:  வாணலியில் நெய்யை சூடாக்கி முந்திரி, பாதாமை வறுத்து எடுக்கவும். அதே வாணலியில் சேமியாவை பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பாலை சூடாக்கி, பாதியாக வரும் வரை காய்ச்சவும். இதனுடன் வறுத்த சேமியாவை சேர்க்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). 10 நிமிடம் கழித்து, சர்க்கரை சேர்க்கவும். நன்கு சுண்டி வரும்போது பாதாம், முந்திரி, நறுக்கிய பேரீச்சம் பழத் துண்டுகள், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி, இறக்கிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment