Sunday, August 9, 2015

கிரீன் வெஜிடபிள் சாலட்


 தேவையானவை: பீட்ரூட் - 6, தண்ணீர் - ஒரு கப், பேபி சாலட் (கொத்தமல்லி,பசலை கீரை ) - 8 கப், பார்ஸ்லி இ்லை - ஒரு கப், வெள்ளை வினிகர் - ஒரு டேபிள் ஸ்பூன், கல் உப்பு - கால் டீஸ்பூன், கருப்பு மிளகுப்பொடி - கால் டீஸ்பூன், ஆலிவ் ஆயில் -2 டேபிள் ஸ்பூன், சீஸ்- அரை கப், லேசாக வறுத்த வால்நட் - கால் கப், வேகவைக்காத நறுக்கிய காய்கறிகள் - தேவையான அளவு.
செய்முறை: மைக்ரோ அவனில், 375 டிகிரி சூட்டில் அரை மணி நேரம் வரை பீட்ரூட்டை வேகவைக்கவும். பீட்ரூட்டில் இருக்கும் தண்ணீர் வற்றிய பிறகு, பீட்ரூட்டை வட்ட வடிவில் நறுக்கிக்கொள்ளவும், பார்ஸ்லி இலைகள் மற்றும் பேபி சாலட், காய்கறிகள், பீட்ரூட் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் வினிகர், உப்பு, மிளகுப்பொடி ஆகியவற்றைச் சேர்த்து லேசாகக் கிளறினால், சாலட் ரெடி.
பலன்கள்: வைட்டமின் பி6, கோலின், பீட்டைன் (Betaine), மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம், செலினியம் ஆகியவை நிறைந்த உணவு. பீட்ரூட் ரத்த அழுத்தம், இதய நோய்கள் போன்றவை வராமல் தடுக்கும். எடை அதிகமாக உள்ளவர்கள் எடை குறைய இந்த உணவை எடுத்துக்கொள்ளவும். வைட்டமின் சி, வைட்டமின் ஏ ஆகியவை நிறைந்தது. சளி பிரச்னை உள்ளவர்கள், ஆஸ்துமா, சைனஸ் உள்ளவர்களுக்கு இந்த உணவு ஏற்றது.

No comments:

Post a Comment