Saturday, August 8, 2015

இடி சாம்பார்


மிளகாய் வத்தல், மல்லி விதை, சீரகம், ஒரு துண்டு மஞ்சள், ரெண்டு பல் பூண்டு இவற்றை உரலில் போட்டு உலக்கையால் இடித்துப் பொடி செய்துகொள்ள வேண்டும். ஒரு தேங்காய்ச்சில்லு, கொஞ்சம் உரித்த சின்ன வெங்காயத்தை அம்மியில் அரைத்துவைத்துக்கொள்ள வேண்டும். முருங்கைக்காய், கத்தரிக்காய் கழுவி நறுக்கி, பாத்திரத்தில் போட்டு புளியைக் கரைத்து ஊற்றி, இடித்த மசாலாவையும் தேவையான அளவு உப்பும் போட்டுக் கொதிக்கவிடவும். காய்கள் முக்கால் வேக்காடாக இருக்கும்போது, அரைத்த வெங்காயம், தேங்காய் கலவையைப் போட்டு மூடிவைக்கவும். 10 நிமிடங்களில் அடுப்பை அணைத்து, இறக்கித் தாளித்துக்கொட்டினால், மணக்கும் இடி சாம்பார் தயார்.
 

No comments:

Post a Comment