Monday, August 3, 2015

பொட்டுக்கடலை மாலாடு


தேவையானவை: பொட்டுக் கடலை - 200 கிராம் (மாவாக் கவும்), பொடித்த சர்க்கரை - 100 கிராம், வறுத்த முந்திரி, திராட்சை (சேர்த்து) - 25 கிராம், உருக்கிய நெய் அல்லது வனஸ்பதி - 150 கிராம், மில்க் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.
செய்முறை:  ஒரு பேஸினில் பொட்டுக்கடலை மாவு, மில்க் பவுடர், பொடித்த சர்க்கரை, வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். உருக்கிய நெய் (அ) வனஸ்பதியை சூடாகச் சேர்த்து உருண்டைகள் பிடிக்கவும்.

No comments:

Post a Comment