Saturday, August 8, 2015

ஸ்டீம்டு சங்கரா மீன் (எண்ணெய் சேர்க்காதது)


தேவையானவை:  சங்கரா மீன் - 250 கிராம், நறுக்கிய பெரிய வெங்காயம் - 50 கிராம்,  சிகப்பு மிளகாய் - 10 கிராம், நறுக்கிய இஞ்சி - 20 கிராம், நறுக்கிய பூண்டு - 5 கிராம், கொத்தமல்லித் தழை - 15 கிராம், சோயா சாஸ் - 5 மி.லி, உப்பு - ஒரு கிராம்,  வெள்ளை மிளகுத்தூள் - 2 கிராம்,  தண்ணீர் - 50 மி. லி.
செய்முறை: சங்கரா மீனின் மேல் தோலை அகற்றி, சோயா சாஸ், உப்பு, மிளகுத்தூள் கலவையை மீனின் மேல் தடவி ஒரு தட்டில் வைத்து விடவும். நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டை நன்றாக சேர்த்துக் கலக்கி மீனின் மேல் வைத்து, சிறிதளவு நீர் விடவும். இந்த தட்டை நீராவியில் வேகவைத்து எடுத்து, கொத்தமல்லி, சிகப்பு மிளகாய்  சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
பலன்கள்: குறைந்த கலோரி, அதிகளவு புரதச்சத்து நிறைந்து. இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால், இதய நோய், கொலஸ்ட்ரால் பிரச்னை வராது. வைட்டமின் - ஏ சத்து அதிகம் இருப்பதால், கண், தோலுக்கு நல்லது. கண்களில் கண் புரை வராமல் தடுக்க, மீன் சாப்பிடுவது அவசியம். பொட்டாசியமும் அதிகம் இருப்பதால், எலும்பு, தசை வளர்ச்சி சீராக இருக்கும். அனைவருமே சாப்பிடலாம்.

No comments:

Post a Comment