Monday, August 3, 2015

வரகு அரிசி வாழைத்தண்டு புலாவ்


தேவையானவை: வரகு அரிசி - கால் கிலோ, வாழைத்தண்டு - 1 துண்டு, பச்சை மிளகாய் - 5, பெரிய வெங்காயம் - 2, தயிர் - 50 மி.லி, முந்திரி, பட்டை, கிராம்பு, ஏலக்காய்த் தூள், அன்னாசிபூ, பிரிஞ்சி இலை - சிறிதளவு, உப்பு, நெய், தயிர் - தேவையான அளவு.
செய்முறை:  வாழைத்தண்டு, பச்சை மிளகாய், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.  அடி கனமான பாத்திரத்தில் சிறிதளவு நெய் ஊற்றி, இதில் பட்டை, கிராம்பு, அன்னாசிபூ, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்க வேண்டும். இதில், முந்திரி, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்துத் தாளிக்க வேண்டும். நறுக்கிய வாழைத்தண்டைப் போட்டு நன்றாக வதக்கி, தயிரை ஊற்றி, அரை லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். ஊறவைத்த வரகு அரிசியை அதில் கொட்டி, தண்ணீர் சுண்டும் அளவுக்குக் கிளற வேண்டும். பிறகு, ஐந்து நிமிடங்கள் மூடிவைக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி, சிறிதளவு நெய் ஊற்றிச் சாப்பிடலாம்.
பலன்கள்:  வாழைத்தண்டு குளிர்ச்சித்தன்மை கொண்டது. நார்ச்சத்து மிக அதிகமாக இருப்பதால், வயிற்றில் உள்ள நச்சுக்களை நீக்கும். உடல் எடையைக் குறைக்கும். இதயத் தசைகள் சீராக இயங்கத் தேவையான பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி6 சத்தும் இதில் இருக்கின்றன. சிறுநீரகத்தில் கல் உருவாவதைத் தடுக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும், வாழைத்தண்டு மிகவும் அவசியம்.

No comments:

Post a Comment