Monday, August 3, 2015

பார்லி வடை

தேவையானவை: பார்லி - ஒரு கப், உருளைக்கிழங்கு - 2, கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4,  கொத்தமல்லி, புதினா - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.  
செய்முறை: பார்லியை 6-8 மணி நேரம் ஊறவிடவும். பிறகு அதை பிரஷர் குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். வாணலியை சூடாக்கி, அதில் வெந்த பார்லி, தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, கடலை மாவு சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி ஆறவிட்டு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து... அதனுடன் அரைத்த பார்லி கலவை, உப்பு, நறுக்கிய வெங்காயம், புதினா, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். இந்த மாவை வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

No comments:

Post a Comment