Monday, August 3, 2015

ஜவ்வரிசி வெள்ளரி விதை உருண்டை

தேவையானவை: முழு ஜவ்வரிசி (உடைந்தவற்றை நீக்கிவிடவும்) - ஒரு கப், வெல்லம் - முக்கால் கப், வறுத்த வெள்ளரி விதை - 10 கிராம், நெய் - அரை டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - இரண்டு சிட்டிகை, நெய் - எண்ணெய் கலவை - 200 கிராம்
செய்முறை:  நெய் - எண்ணெய் கலவையை சூடாக்கி, ஜவ்வரிசியை நிறம் மாறாது வெளுக்க பொரித்து, டிஷ்யூ பேப்பரில் போட்டு அதிகப்படியான எண்ணெயை நீக்கவும். இத்துடன் ஏலக்காய்த்தூள், வறுத்த வெள்ளரி விதை சேர்க்கவும். வெல்லத் துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கரையவிட்டு, வடிகட்டி, அடுப்பில் ஏற்றி உருண்டை பிடிக்க ஏற்ற பதத்தில் பாகு காய்ச்சவும். பாகுடன் ஜவ்வரிசி கலவையை சேர்த்து, கையில் நெய் தடவி உருண்டைகளாக பிடிக்கவும்.

No comments:

Post a Comment