Saturday, August 8, 2015

லீன் அன்ட் லைட் சாலட்


தேவையானவை:  கீரை - 150 கிராம், முளைகட்டிய சிறு பயறு - 50 கிராம்,  தக்காளி - 30 கிராம், வினிகர் - 5 மி.லி, ஆலிவ் எண்ணெய் - 15 மி.லி, மிளகுத் தூள் - 10 கிராம், வெங்காயம் - 25 கிராம், குடை மிளகாய் - இரண்டு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளி, குடைமிளகாய், வெங்காயம், கீரை ஆகியவற்றை நறுக்கிவைத்துக்கொள்ளவும். அதனோடு, முளைகட்டிய பயறு சேர்த்து, ஆலிவ் எண்ணெய், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்துக் கலக்கவும். பின்பு, அதன் மேல் கொத்தமல்லியை நறுக்கித் தூவிப் பரிமாறலாம்.
பலன்கள்: மற்ற சாலட் வகைகளோடு ஒப்பிடும் போது,  இதில் கலோரிகள் குறைவு. தினமும் அதிக கலோரிகள் எடுத்துக்கொள்வதாக நினைப்பவர்கள் இதை உண்ணலாம். கொழுப்புச் சத்தும் மிகவும் குறைவாக உள்ளது. ஆலிவ் ஆயில் இருப்பதால் இதய சம்பந்தமான நோய்கள் வராமல் பாதுகாக்கும்.  அதிக எடை கூடவிடாது. கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும் வயிறு நிரம்பும். உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், இதை எடுத்துக்கொண்டால் உடல் எடையை விரைவில் குறைத்துவிடலாம்.

No comments:

Post a Comment