Saturday, August 8, 2015

இதயத்துக்கு இதமான ஜூஸ்


தேவையானவை: அன்னாசி பழத் துண்டுகள் - 4 (வட்டமாக வெட்டியது),  சிறிய எலுமிச்சை பழம் - 1, சர்க்கரை, ஐஸ் கட்டி - தேவையான அளவு.
செய்முறை: அன்னாசிப் பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கவும். எலுமிச்சையைப் பிழிந்து, சாறு எடுத்துக் கொள்ளவும். அன்னாசிப் பழத் துண்டுகளுடன், சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து, மிக்ஸியில் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.  விருப்பப்பட்டால், ஐஸ் கட்டிகள் சேர்த்துக் கொள்ளலாம்.
பலன்கள்: வைட்டமின் - சி சத்து நிறைந்த ஜூஸ் இது. மாவுச்சத்து, இரும்புச்சத்து, சிறிதளவு பொட்டாசியம், குளோரைடு, மக்னீசியம், மாங்கனீசு முதலான தாது உப்புகள் இதில் நிறைந்து இருக்கின்றன. குளுக்கோஸ் இதில் அதிகம் இருப்பதால், உடலுக்கு நல்ல சுறுசுறுப்பைத் தரும். ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவு இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு் சக்தி அதிகரிக்க உதவும்.
இதய நோயாளிகளுக்கு ஏற்றது.  வயிற்றுப்புண் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் இந்த ஜூஸைக் குடிக்கக் கூடாது. உடல் நலம் குன்றியவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள், மாணவர்கள் தினமும் இந்த ஜூஸை அருந்தலாம். காலையில் வெறும் வயிற்றிலோ, உணவுடன் சேர்த்தோ எடுத்துக்கொள்ளக் கூடாது. காலை மற்றும் மாலை வேளையில் நொறுக்குத்தீனிக்குப் பதிலாக, இந்த ஜூஸ் அருந்தலாம்.

1 comment:

  1. Merkur 34c slot review - Ferrari's casino, slot machines
    Merkur 34C is 메리트 카지노 쿠폰 a German-designed gaming system developed for the deccasino Merkur 34C with an adjustable head worrione design. The design is inspired by the

    ReplyDelete