Saturday, August 8, 2015

கேரட் - வெள்ளரி சாலட்


தேவையானவை: கேரட், தக்காளி, பெரிய வெங்காயம் - தலா இரண்டு, வெள்ளரிக்காய் - 1, பச்சை மிளகாய் - 1, எலுமிச்சைச் சாறு - சிறிதளவு.
செய்முறை: கேரட், வெள்ளரிக்காய், தக்காளி, பெரிய வெங்காயம் ஆகியவற்றை மெல்லியதாக வெட்டிக்கொள்ளவும். மிளகாயைச் சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். இவற்றை ஒன்று சேர்த்து, அதனுடன் எலுமிச்சைச் சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்துச் சாப்பிடலாம்.
பலன்கள்: தினமும் எடுத்துக்கொண்டால், புற்றுநோய்க்கான வாய்ப்பு பெருமளவு குறையும். உடல் எடையைக் கட்டுக்குள்வைத்திருக்க நினைப்பவர்கள், உடல் பருமனைக் குறைக்க நினைப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், செரிமானக் குறைபாடுகளைப் போக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும்.

No comments:

Post a Comment