Monday, August 3, 2015

காடைகன்னி - வாழைப்பழ பாயசம்

தேவையானவை:  காடைகன்னி (தானியம்) - கால் கிலோ, வாழைப்பழம் - 5, கருப்பட்டி, வெல்லம் - தலா 150 கிராம், பால் - 100 மி.லி, முந்திரி, திராட்சை, ஏலக்காய்த் தூள் - சிறிதளவு, நெய் - தேவையான அளவு.
செய்முறை:  காடைகன்னியை வறுத்து, இரண்டு அல்லது மூன்று துண்டுகளாக ஆகும் வகையில் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக்கொள்ள வேண்டும். கருப்பட்டி, வெல்லத்தைச் சேர்த்து, பாகு காய்ச்சிக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் நீர் ஊற்றி, நன்றாகக் கொதிக்கவைத்து, அதில் உடைத்த அரிசியைக் கொட்டி வேகவைக்க வேண்டும். இதில், வாழைப்பழத்தை மசித்துச் சேர்த்து, வெல்லப்பாகை சேர்த்து, நன்றாகக் கிளற வேண்டும். நெய்யில் முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து, பாயசத்துடன் கலக்கவும். ஏலக்காய்த் தூள் சேர்த்து சாப்பிட, சுவை அபாரமாக இருக்கும். 
பலன்கள்: பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்பு மற்றும் வைட்டமின் பி6 போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. வாழைப்பழம் சாப்பிடுவதால், ரத்த அழுத்தம் குறையும். குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து நிறைந்தது. மன அழுத்தத்தைக் குறைக்கும். பித்தம், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளைப் போக்கும். தினமும் ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிட்டுவந்தால், மலச்சிக்கல் பிரச்னை இருக்காது.

No comments:

Post a Comment