Monday, August 3, 2015

கடலை மாவு லாடு

தேவையானவை: தரமான கடலை மாவு - 2 கப், பொடித்த சர்க்கரை - ஒன்றே கால் கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 150 கிராம், வறுத்த முந்திரி - திராட்சை - சிறிதளவு.
செய்முறை:  வாணலியில் நெய்யை சூடாக்கி, கடலை மாவை பச்சை வாசனை போக சிவக்க வறுத்து அடுப்பை அணைக்கவும். இதனுடன் சர்க்கரைப் பொடி, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். சூட்டில் சர்க்கரை இளகி, மாவு கலவை கை பொறுக்கும் சூட்டில் இருக்கும்போது, உருண்டைகள் பிடிக்கவும்.
பின்குறிப்பு: மாவை நன்கு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். இல்லாவிட்டால் உருண்டை ருசிக்காது.

No comments:

Post a Comment