Monday, August 3, 2015

பட்டாணி வடை

தேவையானவை:  பச்சைப் பட்டாணி (உரித்தது) - ஒரு கப் (காய்ந்த பட்டாணி எனில் ஒன்றரை கப்), கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, சோம்பு - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:  பட்டா ணியுடன் (காய்ந்த பட்டாணியில் செய்வதாக இருந்தால் 8 மணி நேரம் ஊற வைக்கவும். பச்சைப் பட்டாணி என்றால், ஊற வைக்க வேண்டாம்) தோல் சீவிய இஞ்சி, சோம்பு, பச்சை மிளகாய், புதினா, கொத்தமல்லி சேர்த்து அரைக்கவும். அதனுடன் கடலை மாவு, உப்பு சேர்த்து, வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி, ஆறவிடவும். ஆறிய விழுதை வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் பொரிக்கவும்.

No comments:

Post a Comment