Saturday, August 8, 2015

பட்டர் சிக்கன் மசாலா:


தேவையானவை: எலும்பு இல்லாத சிக்கன் - 400 கிராம், கொத்தமல்லித் தூள், கரம் மசாலா - தலா 50 கிராம், நறுக்கப்பட்ட வெங்காயம், தக்காளி - தலா 150 கிராம், இஞ்சி, மஞ்சள் பொடி - தலா 40 கிராம், வெந்தயக் கீரை - 50 கிராம், பெருஞ்சீரகம் - 100 கிராம், ஃப்ரெஷ் கிரீம் - 100 மி.லி, வெண்ணெய் - 50 மி.லி, எண்ணெய் - 50 மி.லி, காஷ்மீர் மிளகாய்ப் பொடி - 75 கிராம், இஞ்சி பூண்டு பேஸ்ட் - 75 கிராம், முந்திரி - 100 கிராம், தேன் - 10 மி.லி.
செய்முறை: தக்காளியை வெந்நீரில் போட்டு, சில நிமிடங்கள் வைத்திருந்த பிறகு, தோலை உரித்து அரைத்து எடுக்கவும். முந்திரியை வெந்நீரில் மூன்று மணி நேரங்கள் ஊறவைத்து, அரைத்து பேஸ்ட்டாக்கிக்கொள்ளவும். 
அடுப்பில் கடாயைவைத்து, அதில் வெண்ணெயை ஊற்றி, சிக்கனைச் சேர்க்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட், நறுக்கிய பச்சை மிளகாய், சீரகத் தூள், மிளகாய்ப் பொடி, உப்பு ஆகியவற்றை சேர்த்து, கொஞ்சம் தண்ணீரும் சேர்த்து வதக்கவும். பிறகு, அரைத்துவைத்த தக்காளியை சேர்க்கவும். கடாயின் ஓரத்தில், கிரேவி ஒட்டிக்கொள்ளாமல் வரும் வரை கொதிக்கவிடவும். அடுப்பை ‘சிம்’மில்வைத்து முந்திரி பேஸ்ட்டைச் சேர்த்து, நன்கு கலக்கவும். தேன், கால் கப் தண்ணீர் ஊற்றி கிரேவியையும், சிக்கன் துண்டுகளையும் ஒரு நிமிடம் கொதிக்கவிடவும். கிரீம், கரம் மசாலா, பெருஞ்சீரகம், வெந்தயக் கீரை சேர்த்துக் கலக்கி, அடுப்பை அணைத்துவிடவும். இஞ்சித் துண்டுகள், கிரீம், உருகிய வெண்ணெய் சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.
பலன்கள்: சிக்கனில் அதிகப் புரதம் இருப்பதால், சுறுசுறுப்பாகவும், நல்ல சத்துடனும் இயங்க உதவும். இதில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால், பெண்களுக்கு மிகவும் நல்லது. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அதிகப் புரதம் தேவைப்படுவதால், இந்த உணவை எடுத்துக்கொள்வது நல்லது.

No comments:

Post a Comment