Monday, August 3, 2015

மஞ்சள் பூசணி கீர்

தேவையானவை:  துருவிய மஞ்சள் பூசணி - ஒரு கப், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - ஒன்றரை கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி, திராட்சை - தேவைக்கேற்ப, வெனிலா எசன்ஸ் அல்லது பன்னீர் - 2 சொட்டு.
செய்முறை: வாணலியில் நெய்யை சூடாக்கி, முந்திரி, திராட்சை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே வாணலியில் துருவிய மஞ்சள் பூசணியை வதக்கிக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி, அதில் பூசணித் துருவலை சேர்த்து வேகவிடவும். வெந்ததும், சர்க்கரை சேர்க்கவும். பாதியாக சுண்டியதும், முந்திரி, திராட்சை, வெனிலா எசன்ஸ் அல்லது பனீர் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment